பெண்ணை தாக்க முயன்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு!

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, நிலத்தை குத்தகைக்கு எடுத்து மோசடி செய்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர், நில உரிமையாளரின் மகளை சாதிப்பெயர் சொல்லி திட்டி, அரிவாள், கட்டையால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2017ல் 58 ஏக்கர் நிலத்தை ரூ.1.20 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்ட நிலையில், 2018ல் தந்தை உயிரிழந்த பிறகு நிலத்தை மீட்க முயன்றபோது, நிலத்தை ரூ.3.50 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக ஆறுமுகம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி