தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுகவை சேர்ந்த பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் வரிசையாக இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் நேற்று (மே 29) தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் அரக்கோணம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி ஆகியோரும் த.வெ.க-வில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.