கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி கவிதா (27). இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த கவிதா தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 15) உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.