கந்தர்வகோட்டை: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு!

3பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை அருகே துவார் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி - சுகந்தி தம்பதியினரின் 25 நாள் பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.