கீரனுாரை அடுத்த திருமலை ராயபுரம்டி. மேலப்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு செல்லும் 100 மீட்டர் கேபிள் வயர்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் 2 பேர் திருடினர். இதைப்பார்த்த கிராமமக்கள் இருவரையும் பிடித்து அடித்து, உதைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் இளங்கோவன் இதுபற்றி கீரனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று மின்வயர் திருடிய புதுக்கோட்டை சிப்காட் பகுதியை சேர்ந்த செல்வம் (27), வல்லம் மாதர்சன் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.