கீரனுார்: பெண்ணிடம் செயின் பறிப்பு.. போலீசார் வழக்குப் பதிவு

65பார்த்தது
கீரனுார்: பெண்ணிடம் செயின் பறிப்பு.. போலீசார் வழக்குப் பதிவு
கீரனூர் ஈச்சங்காடு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவரது மனைவி ராணி (43) நேற்று காலை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். தெற்கு ரத வீதியில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராணி கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். ராணியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி