புதுகை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

78பார்த்தது
புதுகை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தென்திறையான் பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (30) கீரனூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று அதிகாலை புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றார். மேலூர் அருகே சென்ற போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளையராஜா அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி