கந்தர்வகோட்டை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

706பார்த்தது
கந்தர்வகோட்டை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் சாலையில் நேற்று முன்தினம் (மே 20) செந்தில் (44) என்பவர் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து அவரது தந்தை அரசு குட்டி(65) அளித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி