புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நவம்பர் 10 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக, கீரனூர் கல்லூரி பகுதியில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவ. வீ. மெய்யநாதன், எஸ். ரகுபதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.