புதுக்கோட்டை நகரில், குறிப்பாக புதிய பேருந்து நிலையம் அருகே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் இரவு நேரங்களில் நடுரோட்டில் படுத்து உறங்குவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, புதுக்கோட்டை நகரம் முழுவதும் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.