கந்தார்வகோட்டை பேருந்து நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் 2006 படி பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 வயது திருமண வயது என விளக்கப்பட்டது. குறைந்த வயது திருமணத்திற்கு உதவுவோர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. 1098, 181 உதவி எண்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.