கட்டும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தையில், சிதலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்ட நிலையில், புதிய தொட்டிக்கான பூமி பூஜை மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இன்று இரவோடு இரவாக தரமற்ற முறையில் கட்டுமானப் பணி நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் அதைத் தடுத்து நிறுத்தினர். கிராம மக்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு புதிய தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி