
கந்தர்வகோட்டை புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!
புதுக்கோட்டை, அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக பணியாற்றிய இ. பரணி, கந்தர்வகோட்டை வட்டாட்சியரகத்தின் புதிய வட்டாட்சியராக நேற்று பொறுப்பேற்றார். ஏற்கனவே இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பரணி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



























