
புதுகை: தேர்தல் நடவடிக்கை குறித்து ஆட்சியர் பேட்டி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா செய்தியாளர்களை சந்தித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடியோகிராபர் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை 18005990142, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.


























