புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் மூன்றாம் தேதிக்குள் முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஊதிய உயர்வு மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கக் கோரி மனு அளித்தனர். இந்த மனுவில், தங்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.