புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் குட்கா விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் மொத்த விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட கஞ்சா விற்பனை தொடர்பாக 60 வழக்குகள் பதியப்பட்டு 93 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 229 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.