புதுக்கோட்டை கீழ ராஜ வீதி கடைவீதி பகுதியில் நேற்று மனோஜ்(29), ஷேக் அப்துல்லா(35), பழனிச்சாமி(43) ஆகிய மூன்று பேர் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்னர், விசாரணை மேற்கொண்டு அவர்களை பிணையில் விடுவித்தனர்.