புதுக்கோட்டை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 37 நலம் காக்கும் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்த முகாம்களில் 50,590 பேர் பயனடைந்துள்ளனர். சர்க்கரை நோய், இதய நோய், மனநல பாதிப்பு, கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.