புதுகை மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 180 பேர் போட்டியிட்டனர். இதில், புதுகையில் 24, ஆலங்குடியில் 10, திருமயத்தில் 10, அறந்தாங்கியில் 10, விராலிமலையில் 8, கந்தர்வகோட்டையில் 6 என மொத்தம் 68 வேட்பாளர்களை நோட்டா (எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்கவில்லை) செயல்பாடு காலி செய்துள்ளது. இது ஒரு வியப்பான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.