புதுக்கோட்டை போஸ் நகர் 8வது வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). காந்திநகர் 2வது வீதியை சேர்ந்தவர் முகிலன். மது அருந்தும்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முகிலனை தினேஷ்குமாரின் நண்பர்கள் தாக்கினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 4) காலை புதுக்குளம் அருகே காலாகுளம் பகுதிக்கு வந்த தினேஷ்குமாரை, அரிவாளால் முகிலன் வெட்டியதுடன், அவரை குளத்துக்குள் பிடித்து தள்ளினார். இதில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தினேஷ்குமாரின் உடலை மீட்டனர். கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகிலன், அவரது கூட்டாளிகளான ரமேஷ், அரவிந்த், ஜெயசுமன், சஞ்சய், கலை, விஜய், தீபன், பவி உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.