புதுக்கோட்டை மாவட்டம் மழையூா் அருகே பொன்னன்விடுதியைச் சேர்ந்த குமரேசன், கடந்த 10 வருடங்களாக கூரை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று (நவ. 04) அவரது வீட்டில் கேஸ் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவால் வீடு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குமரேசன் மனைவி லட்சுமிக்கு வலது காலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற எம்எல்ஏ வை. முத்துராஜா, வீட்டை பார்வையிட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரேசன் மனைவியிடம் ஆறுதல் கூறி, உரிய அரசு நிவாரணம் கிடைக்கவும், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலமாக புதிய வீடு கட்டித்தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.