புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகள் ஆங்காங்கே குவிந்து வருவதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மாடுகளுக்கு மனு கொடுத்து விரட்டும் போராட்டம் நடைபெற்றது. பொன்வசிநாதன் தலைமையில் கருப்பையா, கனகராஜ், குணசேகரன், செபாஸ்டின் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.