அறந்தாங்கி: தலைமை ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

214பார்த்தது
அறந்தாங்கி: தலைமை ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து, இன்று (மே 21) பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அழைத்து, மாவட்ட ஆட்சியர் மு. அருணா சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி