புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் அருகே மே. 17ம் தேதி 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை மாரிமுத்து, சேகர் ஆகியோர் பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.