புதுகை மாவட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் சிரமங்களைத் தவிர்க்க, அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.