புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே நேற்று, ஆத்தங்கரைவிடுதி அக்னி ஆற்றின் அருகே விக்ரம் (24) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்த முயன்றார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மழையூர் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, வழக்குப்பதிவு செய்தனர். அவரிடமிருந்து ஒரு கால் யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.