விஜயபாஸ்கர் புகைப்படம் இருந்த பேனர் கிழித்து அகற்றம்

3பார்த்தது
புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பழனிவேல் இன்று அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பொறுப்பேற்பு விழாவின் போது, முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கரின் புகைப்படம் இருந்த பேனரை அதிமுக தொண்டர்கள் கிழித்தெறிந்து அகற்றினர். மேலும், விஜயபாஸ்கருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.