புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மே 20) வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் துருவன் உதவியுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததால், அலுவலக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.