புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ் நகர் பகுதியில் சுமார் 15 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆலங்குடி சாலையில் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் பாய் விரித்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.