புதுக்கோட்டை திருகோகர்ணத்திலிருந்து கடைவீதிக்கு நேற்று குணசேகரன் (59) மற்றும் கீதா (34) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது புதுக்கோட்டை பிருந்தாவனம் சாலையில் எதிரே வந்த காரை ஓட்டி வந்த ரமேஷ் (59) என்பவர் மோதியதில் கீதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.