புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஜூன் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

55பார்த்தது
புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஜூன் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
புதுக்கோட்டை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை சப் கோர்ட்டில் நடந்து வருகிறது. 

கவர்னர் அனுமதி பெறாமல் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி விஜயபாஸ்கரும், வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ரம்யாவும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயபாஸ்கர், ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.