புதுக்கோட்டையில் முன்னதாக மூடப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளைத் தொடர்ந்து, டவுன்ஹால் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறதா என நகர காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார் தலைமையில் மே 17 காலை 6 மணி அளவில் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள குறுகலான சந்துப் பகுதிகள் மற்றும் பெட்டிக்கடைகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.