புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் மூடல்

668பார்த்தது
தமிழக முதல்வர், பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக, புதுக்கோட்டை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு அருகே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறதா என நகர காவல் ஆய்வாளர் சுகுமாறன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி