புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்கட்டளை சாலையில், காந்திநகர் பகுதிக்கு செல்லும் வழியில் இன்று காலை 40-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநகராட்சி பகுதிகளில் இதுபோல் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.