புதுக்கோட்டை மாவட்டம் மன்னர் கல்லூரியில் தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப்-1 பதவிக்கான தேர்வுகள் இன்று (ஜுன் 15) நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உடன் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.