புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், கீழ ராஜா வீதி வழியாக போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நடனம் ஆடி மாவட்ட விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.