புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் அருகே கும்முபட்டி பகுதியில் திருக்கோகர்ணம் காவல் துறையினர் நேற்று (பிப். 19) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி(29) என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் சோதனை செய்ததில் 510 போதைப்பொருள் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு போன் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதியிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்து புதுகை சிறையில் அடைத்தனர்.