புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரைச் சேர்ந்த கண்ணன் - ராதா தம்பதியினரின் மகன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் தீபக், கின்னஸ் சாதனை முன்னோட்டமாக எட்டு மணி நேரம் விடாமல் ட்ரம் வாசித்துள்ளார். நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறுவனின் சாதனை முயற்சி பெற்றோரை நெகிழச் செய்தது. விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்போம் என பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.