புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரே சந்தப்பேட்டை செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். உடனடியாக மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.