புதுக்கோட்டைக்கு இன்று (நவ. 10) வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், கீரனூர் சண்முகநாதன் தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு அரசு சார்பில் பல்வேறு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வருகையின் முக்கிய நோக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகும்.