புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா, திமுக மாவட்ட செயலாளர் கே. கே செல்ல பாண்டியன், மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி ஆகியோர் இணைந்து இலவச மிதிவண்டிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் கல்வி அலுவலர் சண்முகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.