புதுகை: ரயிலில் காணாமல்போன தங்கச் செயின் மீட்டெடுப்பு

572பார்த்தது
புதுகை: ரயிலில் காணாமல்போன தங்கச் செயின் மீட்டெடுப்பு
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் ரயிலில் புதுக்கோட்டை வந்த நஸ்ரின் என்பவர், கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயின் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரயில்வே புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரயில்வே போலீசார் ரயிலில் தீவிர தேடுதல் நடத்தி, செயினை மீட்டு நஸ்ரினிடம் ஒப்படைத்தனர். செயினை மீட்டெடுத்த ரயில்வே போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி