தமிழகம் முழுவதும் இன்று சிறை காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்காக தேர்வு நடைபெறுகிறது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில் உள்ள தேர்வு அரங்கத்தில் இன்று நடைபெறும் தேர்வை எழுத வந்தவர்களை காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். பேனா, போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.