புதுக்கோட்டை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவரங்குளம், மேட்டுப்பட்டி, குறிஞ்சி நகர், அசோக் நகர் பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இந்த திடீர் கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.