புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அழகன்வயல் கிராமத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை முன்னிட்டு, ஜனவரி 12ம் தேதி அழகன்வயல் பி. எம். எஸ் திருமண மண்டபத்தில் முன் மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்து பயனடையலாம்.