புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி எம்பி துரை வைகோ, புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தினமும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தினார். மேலும், 2028 ஆம் ஆண்டு புதுக்கோட்டை திருவப்பூர் மேம்பாலப் பணிகள் தொடங்கும் என்றும், தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சாலை மாற்றப்பட்டதால் இப்பணி துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.