அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐடிகார்டு வழங்கல்!

1பார்த்தது
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (நவ. 07) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்குகளை உணர்த்தும் வகையில், அதற்கேற்ற உடையணிந்த வினோதமான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டாக்டர் ராமதாஸ், காவல் ஆய்வாளர் சுகுமார், மாநகராட்சி மேயர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புதுமையான முயற்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.