தமிழக அரசு அரசு மதுபான கடைகளில் மதுபான பாட்டிலுக்கு கூடுதல் பணம் பெறக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதை மது பிரியர்கள் கண்டித்தனர். இது தொடர்பாக மது பாட்டில்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.