புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா வருகிற 09. 03. 2026 அன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக, 14. 03. 2026 அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.