புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் நேற்று பென்ஸ் லாரியில் கிராவல் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். செம்பட்டி விடுதி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற காவல்துறையினரை கண்டவுடன் அந்த நபர் தப்பி சென்று விட்டார். 6 யூனிட் கிராவல் மணலுடன் பென்ஸ் லாரியை மட்டும் பறிமுதல் செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.